॥ श्रीशङ्करविजयम् – अनन्तानन्दगिरिप्रणीतम् ॥ – Prakaranam 2 – Part 2

ते ‘अहरहस्सन्ध्यामुपासीत’ इत्यादि विधिवचनानि पीडयन्ति। 

कर्मभ्रष्टान् परानन्ददूरांश्चैतान् नराधमान् ।
स दृष्ट्वा नारदश्शीघ्रमाप ब्रह्मपदान्तिकम् ॥ 

भो धातः ! नूतनमभूज्जगदेतदर्वाक्
वाचित्रयुक्तिपरिकल्पितकर्मशीलम् ।
कालादिजात! निगमार्थपरम्परा स्याद्

व्यर्था तदा यदि भवन्मतमप्रमाणम् ॥ 

भवद्भिः पूर्वमिदमुक्तम् – ‘सदेव सौम्येदमग्र आसीत् ‘ [छा. उ. ६-२-१], ‘ब्रह्म वा इदमग्र आसीत् ‘ [बृ. उ. १-४-११], ‘आत्मा वा इदमेक एवाग्र आसीत् । [ऐ. उ. १-१]

यदाऽतमस्तान्न दिवा न रात्रिर्नसन्न चासच्छिव एव केवलः।
तदक्षरं तत्सवितुर्वरेण्यं प्रज्ञा च तस्मात् प्रसृता पुराणी ॥ [श्वे. उ. ४-१८] इति ।

स्मृतिश्च

क्षरस्सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ।
उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ॥ [भ. गी. १५-१६] इति ।

तत्प्रीतये कर्म करोतु विप्रः क्षत्रस्तु भूमिं महसा भुनक्तु ।
वैश्यो ददात्वर्थमथास्य तुष्टयै शूद्रः करोत्वग्रजपूजनं हि ॥ इति ।

तस्मात् द्विजातीनामेकमेव दैवतं सदादिशब्दवाच्यं ; तस्य गुणातीतवृत्तेर्लिङ्गाभावात् तत्सत्वे मानाभावात् निरुपाधिकं ब्रह्मैव मुमुक्षुभिरुपासनीयमिति ॥

एवं नारदवचनं निशम्य ब्रह्मा चिरं ध्यात्वा स्वलोकात् पुत्र-मित्र-कलत्र-भक्तादि-युक्तः शिवलोकं प्राविशत् । तत्र मध्याह्न-कोटि-सूर्य-तेजसं कोटि-हिमांशु-शीतलं पञ्च-वक्त्रं चन्द्रमौलिं  विद्युत् -पिङ्ग-जटाधरं पार्वती-वामार्ध-शरीरिणं महादेवं दृष्ट्वा दण्डवत् सगणः प्रणम्य संपुटित-हस्त-युगलः ब्रह्मा किलोवाच – 

भो! महादेव! सर्वज्ञ, सर्वलोकेश, सर्वसाक्षिन्, सर्वमय, सर्वकारण, सर्वात्मक, सर्वातीत, सर्व-देव-वन्दित-चरणारविन्द, प्रणव-स्वरूप, प्रणवातीत, प्रणव-गोचर, काल-रूप, कालातीत, कमनीय-विग्रह, कन्दर्प-हर, कामितार्थ-प्रद, करुणाकर, श्री-परमेश्वर, सावधानेन मनसा मदीयां विज्ञापनामवधारय –

तुरीयप्रणवातीतब्रह्मणः सत्यज्ञानानन्तलक्षणात् भवतः किल अर्धबिन्दुरूपा प्रकृतिरुत्पन्ना। तवैतस्याश्च चन्द्रचन्द्रिका-न्यायेन शुद्धाद्वैतता, सैव त्वमेव इति सिद्धम् ।

तुरीयप्रणवातीतब्रह्मणः सत्यज्ञानानन्तलक्षणात् भवतः किल अर्धबिन्दुरूपा प्रकृतिरुत्पन्ना। तवैतस्याश्च चन्द्रचन्द्रिका-न्यायेन शुद्धाद्वैतता, सैव त्वमेव इति सिद्धम् ।

तत्सकाशान्मकारः शुक्लः तामस-गुण-प्रधान उत्पन्नः। तस्मादुकारः कृष्णः सत्वसंपन्नः , तस्मादकारः* शोणितवर्णः रजस्संपन्नः । 

अहं भवदाज्ञया जरायुजादि चतुर्विध-जङ्गमान् पर्वतादीन् स्थावरांश्च सृष्ट्वा समुद्र-द्वीप-गिरि-नदी-वन-गो-तुरग-मर्त्य-करि-सिंह-व्याघ्र-भल्लूकादीन् ब्रह्म-क्षत्र-वैश्य-शूदजातीन् प्राणिनः तत्तद्धर्म-सञ्चार-शीलान् कृत्वा भवच्छरणारविन्द-ध्यानासक्ते मयि सत्यलोकाश्रिते भूलोके कश्चिदुपद्रवः समुत्थितोऽभवत् – 

श्रुत्याचारं परित्यज्य मिथ्याचारं समाश्रिताः ।
विप्रादयो विचित्रैस्तु लिङ्गैस्सन्तप्तदेहिनः॥

हुतं नैव यथाकालं अग्नौ हव्यं स्वमन्त्रतः ।
लिङ्गिनो वयमित्युच्चैः अभिमानाचरा [धमैः] (धमाः)॥


न दत्तं पर्वणि प्राप्ते कव्यं पित्रादितृप्तये ।
नाध्यापि [तो] (तं) ब्रह्मरा[ज्ञः] (ञ) सत्यलोकस्य सिद्धये ॥ 

नाग्निष्टोम नाग्रयणं न संन्यासं कदाचन । 

करोति मनुजः कश्चित् सर्वे पाषण्डमाश्रिताः ॥

विष्णुदासा वयं चेति वयमीशानलिङ्गिनः । 

भैरवार्कगणेशानां देव्या भक्ताश्च केचन ॥ 

केचित् कापालिकाचाराः मद्यमांसाशिनः सदा । 

एकस्यैव मतस्यापि भेदषट्कं समाश्रिताः ॥

बहवोऽवान्तरमताः सिद्धान्तं तं समाश्रिताः । 

तत्स्वरूपमेव परं इति तदादृताचाराः । सत्य-शौचादि-धर्म-कर्म-ज्ञान-रहिताः पशव इव, द्वैतवादिनः श्रुति-स्मृतीतिहास-पुराणोपपुराणादि-भणित-कर्म-ज्ञान-रूप-मार्ग-द्वयं परित्यज्य तृतीयपथा मूढतात्पर्येण विहितमविज्ञाय शुद्धाद्वैत-विद्या-विरोधिनः दुर्नीत्या श्रत्यर्थ-विरुद्धं तात्पर्यं स्वीकृत्य सर्वे कुमतशीला बभूवुः ।

कर्ता त्वमीश जगतां मम केशवस्य

तेजो(भुग)[युगा]न्तसमये लयकर्तृभावात् । 

तस्माद् भुवि प्रबलकुत्सितदुर्मतानां

नाशाय चिन्तय समुद्धर वेदमार्गम् ॥ 

इति ब्रह्मणा प्रस्तुतः श्रीपरमेश्वरः सन्तुष्टान्तरङ्गः सन्निदमुवाच –

ब्रह्मन् ! यथासुखं गच्छ सन्तुष्टोऽस्मि तवोक्तिभिः ।
शङ्कराचार्यनाम्नाऽहं संभवामि महीतले ॥ 

यद्धितं तव विष्णोश्च तदेव स्थापयाम्यहम् । 

मम भक्तावुभौ यस्मात् सत्यं नान्यद्विचिन्तय ॥ 

मद्विभूतिहरिस्त्वं च इन्द्रायष्टदिगीश्वराः । 

वसवोऽष्टौ द्वादशार्का गन्धर्वाश्च मरुद्गणाः ॥ 

यक्षाः सिद्धास्तथा साध्या गरुडाः पन्नगादयः । 

किमत्र बहुनोक्तेन सर्वञ्चेदं चराचरम् ॥ 

मदंशभेदसञ्जातं लये मय्येव लीयते । 

अहमेकोऽक्षरः कर्ता ध्रुवः शाश्वत एव च ॥ 

आत्मा गुहाशयः सर्ववेदार्थः प्रणवात् परः। 

तस्मात् सर्वेषु कालेषु मामद्वैतमुपाश्रय ॥

इति संबोधितो ब्रह्मा प्रणिपत्य महेश्वरम् ।
सगणः प्राप लोकं स्वं तदाज्ञां हृदि संस्मरन् ॥

[ततः सदाशिवश्शम्भुर्लोकानुग्रहतत्परः]
कालटयाख्ये ग्रामवर्ये केरलानामलङ्कृते । 

विद्याधिराजतनयः प्राज्ञः शिवगुरुर्बभौ ॥
(ततः सदाशिवश्शम्भुर्लोकानुग्रहतत्परः) 

तपोमहिम्ना तत्पत्न्यां प्रविवेश स्वतेजसा । 

सा दधार सती गर्भमादित्यसमतेजसम् ॥ 

व्यजायत शुभे काले पञ्चोच्चग्रहसंयुते । 

अनन्दन बान्धवास्सर्वे पुष्पवर्षेर्दिवच्युतैः ॥ 

शम्भोर्वरं अनुप्राप्य पिता शिवगुरुः किल । 

आयुषो ह्रस्वतां जानन्नपि नोवाच किञ्चन ॥

सर्वज्ञत्वादिसुगुणान् शंभूक्तान् तस्य संस्मरन् । 

तेजसा तस्य च शिशोः सूतिगेहोदरस्थितः ॥ 

नैशं तमो निववृते तदद्भुतमिवाभवत् ।

(स्त्रियो विप्राश्च शूदाश्च बाला वृद्धास्तथाऽपरे । 

तं सुजातमभिप्रेक्ष्य शम्भुरित्येव मेनिरे ॥)

सद्यः पुष्पफलाकीर्णास्तरवः सर्वतोऽभवन् । 

[प्रसेदुश्च दिशस्सर्वाः सलिलं विमलं बभौ ॥

नकुलाहिश्वहरिणसिंहदन्तावलादयः । 

अन्योन्यवैरमुत्सृज्य शेमुः शमधना इव ॥

जनाजनपदव्रातादुत्तमाधममध्यमाः । 

आयाताः प्रेक्षितुं सर्वे तं सुवर्णसमौजसम् ॥ 

[स्त्रियो विप्राश्च शूद्राश्च बाला वृद्धास्तथाऽपरे । 

तं सुजातमभिप्रेक्ष्य शम्भुरित्येव मेनिरे ॥]

सौगतस्य करात्तत्र कस्यचिज्जननसंसदि ।

प्रभ्रष्टमपतद्भूमौ पुस्तकं तन्मतार्चितम् ॥

वेदवेदान्तविषया वादाः सुबहवोऽभवन् । 

(प्रसेदुश्च दिशस्साः सलिलं विमलं बभौ) ।

वेदव्यासस्य हृदयमभीष्टार्थसमुद्भवात् । 

प्रहर्षमतुल लेभे विनियोगविदो गिराम् ॥

तस्य शङ्कर इत्याख्यां चक्रे शिवगुरुस्ततः । 

तस्यान्व(र्थः समा) [र्थत्वमा] लोच्य जहृषुः परमर्षयः ॥ 

दिनैः पक्षश्च मासैश्च वर्षैश्च ववृधे सुतः । 

पञ्चवर्षस्य वर्णादिग्रहणेनास्य धीमतः॥ 

उपनीतिमकृत्वेव ममार महितः पिता ।
तस्यौर्ध्वदैहिकं साध्वी चकार ज्ञातिभिस्समम् ॥ 

अथोपनाययामास माता तनयमात्मनः । 

सदाचारवता गोत्रजन्मनैव विपश्चिता ॥ 

चतुरोऽधिजगी वेदान् पञ्चमेऽब्दे स धीरधीः । 

शास्राण्यपि च सर्वाणि बाल एव व्यगाहत ।

चकार मातृशुश्रूषामतिमानुषकर्मकृत् ॥

इत्यानन्तानन्दगिरिकृतौ गुरोस्वतारकथा-नामप्रकरणद्वितीयम् ॥

அவர்கள் “தினந்தோறும் ஸந்த்யோபாஸனம் செய்ய வேண்டும்” முதலிய விதிவாக்யங்களைத் துன்புறுத்தினார்கள். (கடைபிடிக்காமல்). கர்மத்திலிருந்து தவறி பரமானந்தத்திலிருந்து வெகு தூரம் விலகிச்சென்ற இந்த கீழ்த்தரமான மனிதர்களை பார்த்தப்பின் நாரதரானவர் சீக்கிரமாக ப்ரஹ்மலோகத்தை அடைந்தார்.

ஓ தந்தையே! இன்று உலகம் புதுமையானதாக உள்ளது. 

காலம் முதலியவற்றைத் தோற்றுவித்தவரே! வேதபரம்பரையான உங்கள் மதத்தின் நோக்கம் வீணாகி விடும்!

உங்களால் இது முன்பு சொல்லப்பட்டது – “ப்ரஹ்மம் ஒன்றே முதலில் இருந்தது” [சா. உ. 6-2-2], “இந்த ப்ரஹ்மம் (ஆத்மா) ஒன்றே இங்கு முதலில் இருந்தது. [ஐ.உ.1-1]

எங்கே தமஸ் இல்லையோ அங்கே இரவும் பகலும் இல்லை. உள்ளது இல்லை என்பதுமில்லை, ஸத் மட்டுமே. அது அழிவற்ற , மாற்றமற்ற தன்மையது, அது ஸூர்யனின் பரமான ஒளியாகவும், அங்கிருந்தே புராணமான ஞானம் வெளிவந்தது. [ஶ்வே.உ. 4-18] 

ஸ்ம்ருதியும் , 

படைக்கப்பட்ட அனைத்துயிர்களும் அழியக்கூடியவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பரமாத்மா என்று சொல்லப்படும் மிகவும் உயர்வுள்ளவர் வேறாக உள்ளார். [ப.கீ. 15-16]

அதற்குப் ப்ரீதிகரமான கர்மங்களை ப்ராஹ்மணன் செய்யட்டும். க்ஷத்ரியன் பூமியை பெரிதாக அனுபவிக்கட்டும். வைஶ்யன் இதற்கு செல்வத்தை அளிக்கட்டும். ஶூத்ரன் பிறருக்கு சேவை செய்யட்டும் என்பதால் இருபிறப்பாளர்களின் ஒரே தெய்வம் ஸத் முதலிய ஶப்தத்தால் குறிக்கப்படுவது [ப்ரஹ்மம்]. அதன் குணங்களுக்கு அப்பாற்பட்ட தன்மையால், அதற்கு வேறு குறிகள் இன்மையால், அதன் இருத்தலை அளப்பது முடியாததால், உபாதிகள் அற்ற ப்ரஹ்மமே முக்தி வேண்டுபவரால் உபாஸிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு நாரதரின் சொல்லைக் கேட்ட ப்ரஹ்மா உடனே த்யானம் செய்து தன்னுடைய லோகத்தினின்று மகன்-நண்பர்கள்-பத்நீ-பக்தர்களுடன் சிவலோகத்தில் நுழைந்தார். அங்கே நடுப்பகலில் கோடி ஸூர்யர்களின் ப்ரகாசத்துடன், கோடி சந்த்ரர்களின் குளுமையுடன் ஐந்து முகங்கொண்ட பிறை அணிந்தவரை, ஒளிரும் செஞ்சடை தரித்தவரை, பார்வதியை தன் சரீரத்தில் இடது பாகத்தில் உடையவரை, மஹாதேவரைப் பார்த்து, தன்னுடன் வந்தவர்களுடன் ஸாஷ்டாங்கமாக  நமஸ்கரித்து, கூப்பிய இரு கைகளுடன் ப்ரஹ்மாவானவர் உரைக்கலானார். 

ஹே மஹாதேவ! அனைத்தும் அறிந்தவரே! அனைத்திற்கும் ஸாக்ஷியாக உள்ளவரே! அனைத்துமாய் உள்ளவரே! அனைத்திற்கும் காரணமாய் உள்ளவரே! அனைத்தின் தன்மையவரே! அனைத்திற்கும் அப்பாற்பட்டவரே! அனைத்து தேவர்களும் வணங்கும் சரணாரவிந்தம் உடையவரே! ப்ரணவ ஸ்வரூபரே! ப்ரணவத்திற்கும் அப்பாற்பட்டவரே, ப்ரணவத்துக்கு அளவானவரே, கால வடிவானவரே! காலத்திற்கப்பாற்பட்டவரே! அழகிய வடிவங்கொண்டவரே! மன்மதனை வென்றவரே! விரும்பியவற்றைக் கொடுப்பவரே! கருணையின் வடிவினரே! ஸ்ரீ பரமேஶ்வர! என் விண்ணப்பத்தை கவனமாகக் கேட்பீராக!

ஓம்காரத்தின் நான்காவது நிசப்தமான பகுதிக்கும் அப்பாற்பட்ட ப்ரஹ்மத்தினுடையதான ஸத்யம்-ஞானம்-ஆனந்தம் ஆகிய (ஸ்வரூப)லக்ஷணங்களால் உங்களுடைய (வடிவமானதாக) அன்றோ அர்த்தபிந்து ரூபமான ப்ரக்ருதி தோன்றியது.

[ப்ரணவமந்த்ரத்தில் ஒரு மாத்திரை அளவானதாக இரண்டு பாகங்கள் அகார, உகாரம், அர்த்தமாத்திரையாக நாத-பிந்து வடிவமாக அர்த்தபிந்து எனப்படும் ம் காரம். அதற்கும் அப்பாற்பட்டது துரீயம்.   இந்த பிந்து மஹேஶ்வரனின் குறியீடாக சிவபுராணம் முதலியவற்றில் சொல்லப்படுகிறது.]  

உம்முடைய இந்த நிலவு-நிலவொளி [அதாவது நிலவிலிருந்து நிலவொளி எவ்வாறு வேறுபாடற்றதோ] ந்யாயத்தினால் சுத்தமான அத்வைதத்தன்மை, அதுவும் தாங்கள்  என்பது அறுதி ஆனது. 

அதனின்று [ப்ரக்ருதியினின்று] இருள் தாமஸ குணப்ரதானமாக தோன்றியது. அதனின்று மகாரம், வெண்மை நிறமாக தாமஸ குணப்ரதானமாகத் தோன்றியது.அதனின்று உகாரம் கருமை நிறம் நிறைந்ததாய், ஸத்வகுணமும், அதனின்று அகாரம் சிவப்பு நிறத்ததாய், ரஜோகுணம் நிறைந்ததாகத் தோன்றியது. 

[* இங்கே எடுத்துக்கொண்ட பதிப்பில் இரண்டு இடங்களிலும் உகாரம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது இங்கே திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  ]

நான் தங்கள் ஆஜ்ஞையின்படி அன்னையின் கர்ப்பத்தில் தோன்றுவது முதலான நான்கு வகையான நகரும் 

உயிர்களையும் மலை முதலிய நகராதவற்றையும் ஸ்ருஷ்டித்து,கடல், தீவு, மலை, நதி,காடு, பசு,  குதிரை, மனிதர், ஆனை, சிங்கம், புலி, கரடி மற்றும், ப்ராஹ்மண-க்ஷத்ரிய-வைஶ்ய-ஶூத்ரர்கள் ஆகிய ப்ராணிகளின் அந்தந்த தர்மமும் அதற்கேற்ற நடத்தையும், உருவாக்கி, உங்கள் சரணத்தில் ஸத்யலோகத்திலமர்ந்து த்யானம் செய்ய விழைகையில், பூலோகத்தில் ஒரு தொல்லை ஏற்பட்டது. 

வேதத்தில் சொன்ன வழிமுறைகளை விடுத்து, சரியற்ற ஆசாரத்தைக் கடைபிடிப்போர், ப்ராஹ்மணர் முதலியவர்கள் விதவிதமான சின்னங்களுடனான சரீரம் கொண்டவர்களாகி, 

குறித்த காலத்தில், அக்னியில் ஹவிஸைக் கொடுத்து தம் மந்திரங்களால் யஜ்ஞம் செய்வதில்லை. சின்னங்களைத் தரித்தவர் நாங்கள் என்று உரத்த குரலில் பெருமையுடன் கீழ்த்தரமானவர்களால் பித்ருக்களின் த்ருப்திக்காக விசேஷ காலங்களாகிய பர்வதினத்தில் கொடுக்கப்படவேண்டியவை  கொடுக்கப்படவில்லை,  ப்ரஹ்மலோகம் கிடைப்பதற்கான ப்ரஹ்மயஜ்ஞமும் செய்யப்படவில்லை. 

அக்னிஷ்டோமம் ஆக்ரயணம் முதலிய (இஷ்டிகள்) செய்யப்படவில்லை, ஸந்யாஸமும் ஏற்கப்படவில்லை. மனிதன் பாஷண்டமதங்களை கடைபிடித்து எதையோ செய்கிறான்.   

நாங்கள் விஷ்ணுவின் தாஸர்கள் என்றும், நாங்கள் சிவனின் சின்னத்தைத் தாங்குபவர்கள் என்றும், பைரவருடையம் ஸூர்யனுடைய, மற்றும் தேவியின் பக்தர்கள் என்று சிலர். 

சிலர் காபாலிகர்கள் வழியில் செல்பவர்கள், சிலர் மது அருந்தி மாமிசம் உண்பவர்கள். ஒவ்வொரு மதத்திலும் ஆறு வேறுபாடுகள் கொண்டு விளங்கினர். பல்வேறு மதங்களின் ஸித்தாந்தங்களை நம்பி இருந்தனர்.  

அவ்வடிவமே சிறந்தது என்று அப்படிப்பட்ட நடத்தையைக் கொண்டவர்களானார்கள். 

ஸத்யம் , சுத்தம், தர்மம், கர்மம், ஞானம் முதலியவை இன்றி மிருகங்களைப் போல, த்வைதத்தைப் பேசுபவர்கள், ஶ்ருதி ஸ்ம்ருதி, புராணம், உபபுராணம் முதலியவற்றில் சொல்லப்பட்ட கர்ம-ஞான ஸ்வரூபமாக உள்ள இருமார்க்கங்களையும் விடுத்து, மூன்றாம் பாதையாக அறிவற்ற ஸாரம் நிரம்பியதை அறியாமல் சுத்தாத்வைதத்தின் விரோதிகளானவர்கள் தீயவழியினால் வேதத்தில் சொல்லப்பட்ட பொருளுக்கு எதிரான பொருள் கொண்டு எல்லோரும் தீய ஒழுக்கம் கொண்டவர்களானார்கள்.

ஈசனே! நீர் உலகின் என்னுடைய மற்றும் விஷ்ணுவின் கர்த்தா! வேகமாய் வரும் யுகமுடிவைச் செய்யும் தன்மையால், அதனால் உலகில் வேகமாய்ப் பரவும் திகழும் தீயமதத்தவரின் நாசத்திற்காக யோசிப்பீர்! வேதமார்க்கத்தைக் காப்பீர்!

இவ்வாறு ப்ரஹ்மாவால் ப்ரார்த்திக்கப்பட்ட  பரமேஶ்வரன், ஸந்தோஷமடைந்த மனத்துடையவராக இவ்வாறு கூறலானார். 

ஓ ப்ரஹ்மதேவ! த்ருப்தியுடன் செல்! உன் கூற்றால் மகிழ்ந்தேன். சங்கராசார்யர் என்ற பெயருடன் நான் உலகில் அவதரிப்பேன். 

உமக்கும் விஷ்ணுவுக்கும் எது ஹிதமோ அதை ஸ்தாபிப்பேன். நீங்கள் இருவரும் என் பக்தர்கள் ஆகையால் இது உண்மை. வேறெதையும் பற்றிய கவலை வேண்டாம்.

நீர், விஷ்ணு, மற்றும் இந்த்ரன், எட்டு திக்குகளில் தலைவர்கள், எட்டு வஸுக்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், கந்தர்வர்கள், மருத்கள் ஆகிய அனைவரும் என்னுடைய விபூதியே.

யக்ஷர்கள், ஸித்தர்கள், ஸாத்யர்கள், கருட-நாகாதிகள், அதிகம் சொல்வதால் பயனென்ன அனைத்து நகரும் நகராப்பொருட்களும் என் அம்சத்தின் வேறுபாட்டால் இவை அனைத்தும்  தோன்றின. ப்ரளயத்தின் பொது என்னுள்ளேயே ஒடுங்கும். நான் ஒருவன் அழியாதவன். அனைத்தையும் செய்ப்பவன். நிலைத்த தன்மையன் என்றுமிருப்பவனும் கூட.

ஆத்மா உள்ளே மறைந்து உள்ளது, அனைத்து வேதங்களின் பொருளான ப்ரணவத்திற்கும் அப்பாற்பட்டது. அதனால் அனைத்து காலங்களிலும் என்னை அத்வைதபாவனையுடன் நாடுவாய்

இவ்வாறு உபதேசிக்கப்பட்ட ப்ரஹ்மா சிவனை வணங்கி, அவர் ஆஜ்ஞையை மனதிலிருத்தி தன் குழாத்துடன் தன்னுடைய லோகத்தை அடைந்தார்.

[அதன் பிறகு சிவன் உலகத்திற்கு நன்மை செய்வதிலேயே திளைத்தவராய்] காலடி என்ற பெயர் கொண்ட சிறந்த க்ராமத்தில் வித்யாதிராஜரின் புதல்வரான சிவகுரு [அதன் பிறகு சிவன் உலகத்திற்கு நன்மை செய்வதிலேயே திளைத்தவராய்]

என்றவருடைய பத்னிக்குள் தவவலிமையால் தன் தேஜஸுடன் புகுந்தார். அப்பெண் ஸூர்யனுக்கு சமமான தேஜஸுடன் ஒளிர்ந்தாள்.

ஐந்து க்ரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபமான நேரத்தில், பந்துக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆகாயத்திலிருந்து மலர் மாரி பொழிந்தது. 

சிவனிடம் வரம் பெற்று தந்தையான சிவகுரு குறைந்த ஆயுள் என்று தெரிந்தும் ஒன்றும் சொல்லவில்லை.  

ஸர்வஜ்ஞத்வம் முதலிய சிவன் சொன்ன நற்குணங்களை நினைவு கூர்ந்து, தேஜஸுடன் ஒளிர்ந்த அந்த குழந்தையின் அறையில் இருந்தார்.

இரவின் இருள் நீங்கி அத்புதமான (ஒளி) ஆகியது. 

ஸ்த்ரீகள், ப்ராஹ்மணர்கள், சூத்ரர்கள், குழந்தைகள், வயதானவர்கள், பிறர் – நற்பிறப்பைக் கண்டு சிவனே பிறந்ததாக எண்ணினர்.

உடனே மரங்கள் அனைத்தும் புஷ்பமும் பழமும் நிறைந்து விளங்கின. அனைத்து திக்குகளிலும் தூய மாரி பொழிந்தது.

கீரி-பாம்பு, மான்-சிங்கம் முதலியவை தமக்குள் இருந்த பகையை விடுத்து , ஸாம்யமாய் ஸாதுக்களைப் போலாகின. 

எல்லா ஊர்களிலிருந்தும் மேலான நடுத்தரமான கீழான என்று அனைத்து மக்களும் அந்த பொன்னிற ஒளியைக் காண அனைவரும் வந்தனர். 

ஸ்த்ரீகள், ப்ராஹ்மணர்கள், சூத்ரர்கள், குழந்தைகள், வயதானவர்கள், பிறர் – நற்பிறப்பைக் கண்டு சிவனே பிறந்ததாக எண்ணினர்.

ஒரு பகுதியிலிருந்த பௌத்தர்களுடைய கையிலிருந்து 

அவர்கள் மதத்தைச் சார்ந்த புத்தகம் கீழே விழுந்தது.

வேதவேதாந்த விஷயமான வாதங்கள் பல நடந்தன. 

வேத வ்யாஸருடைய ஹ்ருதயம் தன்னுடைய ஆசை நிறைவேறியதாக எண்ணி அளக்கவொண்ணா ஆனந்தம் அடைந்தது

அவருக்கு சங்கரர் என்ற பெயரை வைத்தார் சிவகுரு. அது காரணப்பெயராக இருக்கக்கண்டு மகிழ்ந்தனர் பரமரிஷிகள்.

நாள் தோறும், பக்ஷம் தோறும், மாசந்தோறும், வருடந்தோறும் வளர்ந்தான் மகன். மிகுந்த அறிவுடன் அக்ஷரங்களை ஐந்து வயதிலேயே கற்றான்.

உபநயனம் செய்யாமலேயே பெற்ற தந்தை இறந்தார். அவருடைய அந்திம ஸம்ஸ்காரங்களை உறவினர்களுடன் அந்த உத்தமி செய்தாள். கோத்ரத்தில் பிறந்த ப்ராஹ்மணர் மூலம் உபநயனம் செய்வித்தாள். 

நான்கு வேதங்களையும் ஐந்தாவது வயதிலேயே அந்த அறிவுள்ளவர் கற்றார்.  அச்சிறுவன் அனைத்து சாஸ்த்ரங்களையும் கூட கற்றுத் தேர்ந்தார். அதன் பின் மானுடச் செயல்களுக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய வல்லாரான அவர் அன்னைக்கு உதவிகள் செய்தார்

ஆனந்தகிரியின் க்ரந்தத்தில் குருவின் அவதார கதை என்ற பெயர் கொண்ட இரண்டாம் அத்யாயம். 

They tormented the injunctions in the Vedas (i.e. by not following them) such as “One must do sandhyopasana everyday”. Seeing these inferior humans who fell from the path of Karma and moved far away from the supreme bliss, Narada reached Brahmaloka quickly.

O father! Today the world is strange! One who created time and other entities! The purpose of your dharma which is inherited through the Veda parampara will go to waste.

This has been previously said by you. “Brahman alone was there in the beginning. [Ch. U. 6-2-2] and “In the beginning only this atma was there [Ai. U. 1-1]

Where there is no tamas, there is no day or night, there is no being or non-being, just ‘sat’ alone. That which is indestructible and changeless. It is the light of the Sun and from it the primordial jnana emanates. [Sve. U 4-18]

Smrtis (say) as well: 

It is said that all that is created is destructible. However, the most exalted Paramatma is apart. [Bha.Gi 15-16]

For that, let the brahmana do what pleases Him, May the Kshatriya enjoy the landl May the Vaishya offer wealth; May the sudra serve others

Due to this, the only devata of the brahmanas is the Brahman, which is indicated by words such as Sat. Due to its nature beyond gunas, due to its existence being immeasurable, due to an absence of any marks for it, due to its being immeasurable, those that brahman alone without upadhis must be worshipped by those wishing for mukti. 

Thus, hearing the words of Narada, Brahma immediately went into dhyana and reached Shivaloka along with his son, friends, consort and devotees. There he saw Mahadeva shining splendorous like the crores of suns, cool like a crore of moons, the five-faced crescent-bearing one, with the cool matted locks, who has Parvati by His side and did sashtanga namaskara and with folded hands, Brahma spoke thus: 

O Mahadeva! The omniscient! The one who is a witness for everything! The one who pervades all! The one who is the cause of all! The one whose nature pervades all! The one who is apart from all! The one whose feet are worshipped by all the devas! The one who is the nature of Pranava! The one beyond Pranava! The one who is a measure for Pranava! The one who is Time! The one who is beyond time! The beautiful one! The one who conquered Manmatha! The one who gives what (devotees) ask! The compassionate Parameshvara! Please listen to my entreaty with attention!

Prakrti appeared as your form. By the swarupa lakshanas of brahman such as satyam jnanam and anantam beyond the fourth silent part of Aumkara.

[The two parts of the pranava mantra with one matra each akara and ukara, the mkara which is of the form of nadabi ndu, also known as ardhabindu and turiyam that is even beyond it. It is said in the Sivapurana that this bindu represents Maheshvara]

By the maxim of moon and moonlight [ie of the moonlight not being different from the moon] it is certain that you are non different from this shuddha Advaita svarupa.

From that [prakrti] , darkness arose as that with predominance of tamoguna. From that makāra, white in colour, appeared with the predominance of tamoguna. From that ukara dark and sattvaguna,  from that akāra red with predominance of rajoguna appeared.

[In both variants provided in the publication here, it is given as ukāram in both places. It has since been corrected as akāram]

Per your orders, I created the four kinds of movable beings – beginning from those born from a womb, and immobile obects such as the mountains and further the oceans, islands, hills, rivers, forests, cows, horses, human beings, elephants,lions, tigers, bears and the order of dharma for the classes of brahmana-kshatriya-vaishya-shudras and sat down to meditate on your feet, seated in satyaloka, there occurred some trouble in bhuloka.

Leaving the rules stipulated in the Vedas, those following the achara that is not correct, the brahmanas and others, with various marks adorning their bodies, did not offer yajnas in agni at the appropriate times, with their mantras. The offering to pitrs that are to be offered at the appropriate special times are not offered by these lowly-beings, who declare loudly with pride, that they are the bearers of these marks on their bodies. Brahmayajna, which merits them a place in Brahmaloka is not being performed by them.

Ishthis such as agnishtomam, agrayanam are not being done. Nor is sannyasa being taken up by them. Humanbeings take to the fallen ways and do something else altogether.

Some say they are the adherents of Vishu, some say that they bear the marks of Shiva and others say that they bear the marks of Bhairava, Surya and some that they are the adherents of Devi.

Some followed the paths of the Kapalikas, some drink alcohol and eat meat. Each doctrine had six differences. They believed in many doctrines. 

With the belief that that form is the most excellent, they behaved thus. Those that speak of differences, wandered about like animals without satyam, purity, dharma, karma and jnana leaving both the path for the nature of  karma and jnana mentioned in shruti, smrti, puranam, upa-puranam, they followed a third ignorant path which had no value and as enemies of the shuddha advaita tatva, with their evil ways, they took the purport entirely opposed to what is mentioned in the Veda and became the followers of evil practices.

O Ishvara! You are the creator of me and Vishnu! Due to the nature of the fast-approaching end of yuga and due to the spreading of evil ways and for destroying these, Please protect the path of the Vedas! 

Parameshvara with a pleased mind, praised by Brahma in this manner, spoke thus:

O Brahmadeva! Go in peace! I am pleased with your words. I will incarnate in this world with the name Shankaracharya. I will establish that which is good for you and Vishnu. You are both my devotees. Hence, this is true! There is no need to worry about anything else.

You, Vishnu, Indra, the Lords of the eight directions, the eight vasus, the twelve Adityas, gandharvas, Maruts and all others are my manifestation.

Yakshas, Siddhas, Sadhyas, Garudas-Nagas, why list more – all mobile and immobile beings originated from my amsha. They merge with me during pralaya. I alone am indestructible and the creator of all. I remain forever eternally.

Atma is hidden inside. It is beyond the pranava, the essence of the Vedas. Hence, seek me at all times with advaita bhavana!

Thus, instructed Brahma, bowed down to Shiva, taking his instruction to heart, went back with his retinue and reached His own loka.

[Then Shiva, always engaged in doing good to the world], in the excellent village named Kaladi, entered with his tejas into the womb of Vidyadhiraja’s son Shivaguru. That lady with the radiance similar to that of the Sun.

In an auspicious time, when five grahas are in exaltation, the relatives were pleased. Showers of flowers fell from the sky.

The father Shivaguru, having granted the boon by Shiva did not say anything (despite) knowing of the short lifespan of his son.

Recalling the qualities such as Sarvajnatva etc mentioned by Shiva, he was in the room with that radiant child.

The darkness was removed and made way for brilliant light. Seeing at the glorious birth, women, Brahmanas, shudras, children and elderly people all felt as if Shiva Himself was born.

Instantly, trees bloomed with flowers and fruits. Pure rain showered from all directions.

The mongoose and the snake, the lion and the deer let go of the enmity between them and behaved as though they were ascetics.

People of various strata and classes – the upper, middle and lower all came to witness the glorious light.

Seeing at the glorious birth, women, Brahmanas, shudras, children and elderly people all felt as if Shiva Himself was born.

The book of the Bauddhas fell from their hands in one part. 

Many discussions on the topic of Veda and Vedanta took place. Veda Vyasa’s heart delighted thinking that His long-desire is fulfilled.

Shivaguru named him Shankara. The supreme Rshis were delighted at the significance of the name. 

With each day, fortnight, month and year, the son grew. He learnt the aksharas with great intelligence by the time he was five.

His father passed away without performing his upanayana samskara. The noble lady performed his antima samskaras with the help of relatives.

She had his upanayanam performed with the help of brahmas born in her gotra.

That wise (boy) learnt the four vedas at fifth year. The boy also mastered  all the shastras. Then, he who was capable of doing things beyond the grasp of human beings, attended on his mother

Thus ends the second chapter named Guru’s avathara katha in the book of Anandagiri.